நான், சிறுவர் அமுதம் ஆசிரியர்களான புனிதமலர், இராஜேஸ்வரன் தம்பதிகளின் ஒரே மகள் ஆவேன். இலங்கையில் பிறந்த நான், 1986 ஜேர்மனி நாட்டுக்கு வந்தேன். ஜேர்மன் பள்ளியில் சேர்ந்து நான் ஜேர்மன் கற்றுக் கொள்ளும் முன்பே எனது அன்னையும் தந்தையும் எனக்கு வீட்டில் தமிழ் ஆர்வத்தை வளர்த்தார்கள். எனது அன்னை பல பல கதைகள் சொல்லி எனக்கு தமிழில் ஆர்வம் ஏற்ற, எனது தந்தை அறிவியல், துணுக்குகள், கவிதை, கட்டுரை மூலமாக எனது ஆர்வத்தை வளர்த்தார். தமிழைப் பள்ளிப் புத்தகங்களாலோ இல்லை திருக்குறள், ஆத்திசூடி போன்ற பழமையான, பழைய நூல்களாலோ திணிக்காமல், எனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை நன்று அறிந்து எனக்குத் தெரியாமலே தமிழை என்னிடம் ஊற்றினார்கள். சிறுவர் கதைகள், பகிடிகள், பல சினிமா சஞ்சிகைகள், ஏன் பல பல திரைப் படங்கள் (அதிலும் கருப்பு வெள்ளை படங்கள்) மூலமாக தமிழ் என்னிடம் தானாகவே வந்தது. கண்டதும் கற்க பண்டிதன் ஆவான் என்பதே அவர்கள் கொள்கையாக இருந்தது.
படம் பார்க்காதே, போய் படி படி என்று சொல்லும் எங்கள் கலாச்சாரத்தில், படம் பார், நல்ல படங்களை தேர்ந்தெடு, அதிலும் படிக்க பல விஷயங்கள் இருக்கின்றன என்று என்னை வளர்த்தார்கள். படங்களில் எழுத்துக்காட்டை ஓட விடும் காலத்தில், அதனை வாசிப்பதே எனது முதல் பாடமாக இருந்தது. எனக்கு தெரிந்து நான் முதல் முதல் தேர்வுக்கு படித்தது, பல்கலைக்கழகம் போன காலத்தில்தான். அது மட்டும் வீட்டுப்பாடம் செய்யத் தவிர, வேறு நேரத்தில் பாடப் புத்தகங்கள் கையில் எடுத்ததே இல்லை. எடுக்க சொல்லி என்னை எனது பெற்றோரும் கட்டாயப் படுத்தியதும் இல்லை. படிப்பு என்று தெரியாமல் விளையாட்டு எனக் கருதி பல விஷயங்களை என் அப்பாவிடம் இருந்து படித்தேன். Pädagogik (Pedagogy) பாடம் படிக்காமலே, பிள்ளைகளுக்கு எப்படி பாடம் சொல்லிக் கொடுப்பது என்று நன்று தெரிந்தவர் என் அப்பா. அவர் 1980களின் முடிவில் Bergheim Erftஇல் ஒரு தமிழ் பள்ளியைத் தொடங்கினார். இடப் பிரச்சினை, பணப்பிரச்சினை காரணமாக இதைத் தொடர்ந்து நடத்த முடியாவிட்டாலும், பள்ளிக்கூடம் எங்கள் வீட்டில் தொடர்ந்து நடந்தது. எனது அம்மா ஆசிரியையாகவும், உணவாளியாகவும் பணியேற்க, நானும் 7 வயதினிலேயே என்னை விட சிறியவர்களுக்கு ஆசிரியையாக பணியேற்றேன். 1990ல் எனது தந்தை அடுத்த படி எடுத்து வைத்தார். அதுதான் சிறுவர் அமுதத்தின் பிறப்பு. அவர் கை எழுத்தில் முதல் இதழ்கள் வெளியாகின. பின்பு தடடச்சு, கணனி என்று முன்னேறியது சிறுவர் அமுதம். அவரும் அங்கும் இங்கும் காரில் (சிற்றுந்து, மோட்டார் வண்டி) பயணம் செய்து இந்தச் சஞ்சிகையை பிரபலம் ஆக்கினார். ஜேர்மனி மட்டும் இல்லாமல் பல நாடுகளில் இது வாசிக்கப் பட்டு வந்தது.
இன்னும் பல பல செய்ய வேண்டும், புத்தகம் வெளியிட வேண்டும், தமிழ் புத்தகசாலை நடத்த வேண்டும் என்ற அவரின் எண்ணங்களை 19.04.1994 அன்று கார் விபத்து மண்ணோடு புதைத்தது. இன்று போல இருக்கின்றது. விழா ஒன்றுக்கு சென்ற அப்பா வருவார் என்று வீட்டில் காத்திருந்தேன். வீட்டு மணி அடித்தது, கதவை திறந்தேன், அப்பா அங்கு இல்லை, போலீஸ்காரர் இருவர் வந்து இருந்தனர். அவர்கள் ஜேர்மனில் சொன்னது எனக்கு நன்றாக புரிந்திருந்தாலும், அது பிழையாக இருக்க வேண்டிக் கொண்டேன். "Ums Leben gekommen என்றால் அவர் பாதிப்பிலிருந்து தப்பி விட்டார் என்றுதானே அர்த்தம்?" என்று ஒரு நப்பாசை. ஆனால் நான் புரிந்து கொண்டது சரியாக இருந்தது. அப்பா இறந்து விட்டார்.
நான்
அப்பாவின், அதாவது இராஜேஸ்வரனின் ராஜகுமாரி. பெண்பிள்ளைகள் கூடுதலாக அப்பாவின் செல்லமாக
இருப்பார்கள். நானும் அது போலத்தான். அப்பா பொத்திப் பொத்தி வளர்த்த என்னை
திடீர் என வாழ்க்கை நிலத்தில் வீழ்த்தி காலால் மிதித்தது போல இருந்தது. என்
குழந்தைப் பருவம் அந்த நாளோடு முடிந்தது, ஒரு நாளிலே பெரியவள் ஆகி
பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை. அதே நிலைதான் என் அம்மாவுக்கும். அப்பாதான்
வீட்டு பொறுப்பாளி, வங்கி விஷயம் பற்றியோ, asyl விஷயம் பற்றியோ, என்
அம்மாவுக்கு அவர் சொல்லியதில்லை. எல்லாமே அப்பாவின் பொறுப்புத்தான்.
அன்று அவர் இறந்து விட்டார். ஒன்றும் தெரியாத சிறு பிள்ளையாக நான் மட்டும் இல்லை, நானும், என் அம்மாவும், இருவருமே நின்றோம்.
எனினும்.....
அப்பா இறந்தபோது எங்கள் உறவினர்கள், "பெண்கள் நீங்கள் எப்படி தனியாக இருப்பீர்கள் எங்களோடு வந்து விடுங்கள், உன் பெண்பிள்ளையை நீ எப்படி தனியாக வளர்ப்பாய்" என்றெல்லாம் என் அம்மாவைக் கேட்டபோது, அவர்களை எதிர்த்து என்னால் முடியும், எங்களால் முடியும் என்று தைரியமாக சொன்னவர் என் அம்மா. அப்படி சொன்ன அந்த தைரியசாலிக்கு இன்றும் கூட ஜேர்மன் மொழியில் 5 வசனங்கள் ஒழுங்காக சொல்லத் தெரியாது. அனால் புலம் பெயர் நாட்டில் ஒரு பெண்பிள்ளையை வளர்த்து தனியாக வாழும் தைரியம் மட்டும் இருந்தது. இங்கு வளர்ந்து, இங்குள்ள மொழி நன்கு அறிந்து, இங்கு படித்து, பட்டம் பெற்ற எனக்கே அவ்வளவு தைரியம் இருந்து இருக்குமோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். அவர் அன்று எடுத்த முடிவுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று. அந்த முடிவினால்தான் இன்று நான், நானாக, Dr. பிங்கலையாக இருக்கிறேன்.
என் அம்மா எனக்கு என்றுமே அம்மாவாக தோன்றியது இல்லை. அவர் எனது சிநேகிதி. அன்று, எனது உயிர் சிநேகிதி, இன்று, அவர் வயது, உடல்நலக்குறைவுகள் காரணமாக எனது மூத்த மகள். அனால் என்றும் அம்மாவாக இருக்கவில்லை. இருவருமே சேர்ந்து வளர்ந்தோம்.
அன்று எனது அம்மா, தனியாக வாழ்வோம் என்று மட்டும் அல்ல, சிறுவர் அழுத்தத்தையும் தொடர்ந்து நடத்துவோம் என்று தைரியமாக சொன்னார். சில மாதங்கள் இடைவேளைக்கு பிறகு சிறுவர் அமுதத்தை அவர் தலமை ஆசிரியையாக தொடர்ந்தார். எனக்கும் துணை ஆசிரியையாக பதவி உயர்வு. அப்பப்பா எத்தனை ஞாபகங்கள்! பணம் இல்லை, வசதி இல்லை, காரில்லை. இருந்த குக்கிராமத்தில் 2 மணித்தியாலத்திற்கு மட்டுமே பஸ் (பேருந்து) ஓடும், சனிக்கிழமைகளில் அரை நேரம் ஓடும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றும் ஓடாது. புத்தகம் அச்சடிக்க 2-3 தரம் பஸ் மாற வேண்டும். இன்டர்நெட், மொபைல் போன் இல்லாத காலம் அது. கடைக்குப் போய் பொருள்கள் வாங்குவதே கஷ்டமாக இருந்த அந்த நேரத்தில், சிறுவர் அமுதத்தை எப்படி நடத்தினோம் என்று இப்போது நினைத்தால் வியப்பாக உள்ளது. ஆனால் மேலும் 5 வருடங்களுக்கு இந்தப் பத்திரிகையை நாங்கள் இருவரும் தொடர்ந்து நடத்தினோம். பல அடிகள் பட்டோம், பல பிரச்சினைகள் கண்டோம், ஆனால் அன்று வலி தந்த அந்த அடிகள் இன்று இனிக்கின்றன. இன்டர்நெட், தமிழ் வானொலி, தொலைக்காட்சி வருகையினாலும், தமிழ் ஆர்வக் குறைவினாலும் எங்கள் வாசகர்கள் குறையத் தொடங்கினார்கள். ஐந்து வருடத்திடற்கு பிறகு சிறுவர் அமுதத்தை இனி தொடர்வதில்லை என்று முடிவெடுத்ததோம்.
இப்பொழுது 20 வருடத்திற்கு மேல் ஆகி விட்டன. இந்த 20 வருடங்களும் பள்ளி, பல்கலைக்கழகம், காதல், கல்யாணம், வேலை, பிள்ளைகள், இடமாற்றங்கள், அம்மாவின் உடல்நலக் குறைவுகள் என்று ஓடி விட்டன. அப்பாவை பற்றி நினைக்கவே அவ்வளவு நேரம் இல்லை. அப்போது சிறுவர் அமுதத்தை பற்றி நினைக்க எங்கு நேரம்? எங்கள் கெல்லரின் (basement) மூலையில் எங்கள் சஞ்சிகைகள் ஒழிந்தன. அனால் மனதில் அவ்வப் போது ஒரு கவலை இருக்கும். அதுவும் என் பிள்ளைகளைப் பார்க்கும் போது. அவர்களை அப்பா பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பார்? என்னை மகள், மகள், என்று வளத்தவர், அவர்களை பேரன், பேரன் என்று வளத்திருப்பார் அல்லவா? ஆனால் என் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லை, என் கணவருக்கும் கூட என் அப்பாவை தெரியாது, சிறுவர் அமுதத்தை தெரியாது , ஏன் என் அம்மாவைக் கூட ஒரு சஞ்சிகையின் ஆசிரியையாகத் தெரியாது. இன்டர்நெட்டில் கூட அவர்களைத் தேடினால் ஒன்றும் இல்லை. புதுமையை விரும்பினார் என் அப்பா. ஜேர்மனியில் முதன் முதலாக தமிழ் தடடச்சுப்பொறி, தமிழ் கணனி வைத்திருந்தவர்களில் ஒருவராக இருந்தார் அவர். ஆனால் துரதிஷ்டவசமாக இன்டர்நெட் காலம் பூக்க முன்பே இறந்து விட்டார்.
இன்டர்நெட்டில் ஒருவர் இல்லை என்றால், வாழ்ந்ததே இல்லை என்ற நிலையில் நாங்கள் இன்றைய காலத்தில் இருக்கிறோம். அப்பாவின் இறப்பு கவலைக்குரியது என்றாலும், அது நடந்து விட்டது. சின்ன இராஜேஸ்வரன் எனும் மனிதன் இறந்து விட்டான். மனிதன் இறக்கலாம், ஆனால் மனிதனின் படைப்புகள் இறக்கலாமா? அப்பாவின் படைப்புகளின் இறப்பு மிகவும் கவலையைத் தந்தது. இந்த வலைப்பக்கம் வெளியிட வேண்டும் என்று பல நாள் ஆசை. ஆனால் ஏனோ செய்யும் நிலை வரவில்லை. இப்பொழுது, இந்த வருடம், அப்பா உயிருடன் இருந்தால் அவருக்கு 70வயது ஆகி இருக்கும். இதையொட்டி இந்த வலைப்பக்கத்தை வெளியிடுகிறேன்.
எங்கள் பல பல வீடு மாற்றங்களால் எங்களிடம் எல்லா இதழ்களும் இல்லை. இருக்கும் இதழ்களை ஓன்லைனின் வெளியிடுகிறேன். இப்போதுதான் தொடங்குகிறேன். இன்னும் சில மாதங்களில் முழுமை பெரும்.
இத்துடன் உங்களிடம் இருந்து ஒரு உதவியையும் கேட்டுக் கொள்கிறேன்.
1) எங்களிடம் இல்லாத சஞ்சிகைகள் (முக்கியமாக முதல் பதிப்பு கிண்ணம் 1*எண்ணம் 1) உங்கள் வீட்டின் எந்த மூலையிலாவது இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பி வைத்து உதவவும்.
2) நினைவுகள் எனும் பகுதியில் உங்கள் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன். எந்த மொழி, எதைப் பற்றி, எந்த வடிவம் (எழுத்து வடிவம், புகைப்படம், வீடியோ பதிவு) ஒன்றும் முக்கியம் இல்லை :-).

3)
இந்த வலைப்பக்கத்தை தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, அதிலும்
முக்கியமாக அப்பாவையும், அம்மாவையும் அறிந்தவர்களுக்கும், பழைய சிறுவர்
அமுதம் வாசகர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.
இத்துடன் உங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
உங்கள்
பிங்கலை
(அன்று: பிங்கலை இராஜேஸ்வரன், இன்று: பிங்கலை செந்திலன்)

* எழுத்துப் பிழைகள் இருந்தால் கண்டு கொள்ள வேண்டாம். தமிழில் எழுதி பல ஆண்டுகள் ஆகி விட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக