11 மே, 2020

நினைவுகள் ~ மருமகள் சரளா


எனது ஆசை மாமாவின் 70 ஆவது பிறந்த நாளுக்கு அவரின் நினைவுகளுடன், அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் நினைவுகள் எங்கள் மனதில் வண்ணங்களாய் இருக்கின்றன

அதில் சில ,

என் மனதுக்குள் உங்களைப்பற்றி நினைக்கும் பாேதெல்லாம் என் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் அவையெல்லாம் நீங்கள் எங்களுக்கு காட்டிய அன்பின் நன்றிகள் , நீங்கள் எங்களுக்கு மாமா மட்டும் இல்லை நல்ல தந்தையாகவும் நல்தாெரு ஆசானகவும் , மற்றும் நிழல் தரும் மரம் பாேன்று இருந்தீர்கள். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்ததைக்காட்டிலும்  மாமாவின் அரவணைப்பில் வளர்ந்ததே அதிகம் எனக்கும் எனது சகாேதரர்களுக்கும் பெயர் வைத்தது  முதல் நல்ல துணிமணிளை வாங்கி பாேட்டு அழகு பார்த்ததும்  நீங்களே , விடுமுறை  நாட்களில் பயில வைத்தீர், இவ்வுலகை எமக்கு புரிய வைத்தீர், ஆசானாய் ,தாேழனாய் எம்மாேடு வாழ்ந்தீர் , அந்நேரத்தில் புரியவில்லை உமது வார்த்தைகள் இன்றாே அவை  ஒவ்வாென்றும் எமது தாரக மந்திரம். முத்தமிழை பாெழிந்து ,வேடிக்கை கதை சாெல்லி ஓடித்திரிந்த நீங்கள் இன்று எங்கள் எதிரில் புகைப்படத்தில் மட்டுமே . உங்கள் உயிர் எம்மை பிரிந்தாலும் எப்பவும் நீங்கள் தான் எங்கள் உயிர் மாமா ! நினைவுகள் எனும் பகுதியில் உங்கள் நினைவுகளை பகிர்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அருமையான முயற்சி , வாழ்த்துக்கள் பிங்கலை 
       
நன்றி 
 த.சரளா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக