5 ஜூன், 2020

நினைவுகள் ~ ஜெயா குடும்பம்

















உருத்திரபுரத்தே பிறந்தவராம்
உயிரெனத் தமிழை நினைத்தவராம்
உன்னத உயிர் அன்று உறைந்ததுவே
உறுதியின் உறைவிடம் தகர்ந்ததுவே
நான்கு வருடங்கள் நட்போடு நீர் இருந்தீர்
நான் வளரப் பலவழியில் நீர் உழைத்தீர்
கவிஞனாக எனை அன்று களத்தில் நீர் இறக்கிவிட்டீர்
கண்மூடித்தூங்கும் நேரம் காலனுடன் சென்றுவிட்டீர்
மகளை ஓர் கண்ணாக கரம்பற்றி வளர்த்து வந்தீர்
மனையாளை மறுகண்ணாய் மனதினிலே ஏற்றுவந்தீர்
மறைந்தது மாதங்களல்ல கரைந்தது கால் நூற்றாண்டு
மறக்குமா எம்மனது மலர்ந்த உம் முகம் அதனை
மக்கள் மனையாளுடன் மனதுருகிப் பிரார்த்திக்கும்

ஜெயா குடும்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக