20 மே, 2020

நினைவுகள் ~ சாந்தி தயாபரன்

என் அன்பான ராசமாமா எம்மை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.  என் 11 வயதிலிருந்து நான் அவர்களுடன் வாழும் வாய்ப்பு கிடைத்தது.  என்னைப் பிறர் போற்றுமளவிற்கு மிகவும் நன்றாக படிக்க வைத்தார்.  பின் நாட்டு நிலைமை காரணமாக ஐரோப்பாவிற்கு புலம் பெயர் வேண்டிய சூழ்நிலையில் என்னையும் தன்னுடன் அழைத்து வந்தார்.   அங்கே எனக்கு திருமணம் பேசி அவரே முன்னின்று செய்து வைத்தார்.  எனக்கு மாமாவும் அப்பாவும் ஆசானும் அவரே. படிக்க வசதி இல்லாத குழந்தை களுக்கு உதவிகளை அள்ளி அள்ளி வழங்குவார். தமிழ்ப்பற்று மிக்க இவர் பட்டிமன்றம் கவியரங்கம் சொற்பொழிவு புத்தக வெளியீடு தமிழ்ப்பாடசாலை என் பல துறைகளில் சிறந்து விளங்கினார்.  இப்படி மாமாவின் அருமை பெருமை களை கூறிக்கொண்டே போகலாம்.  இந்த நேரத்தில் அவரை நினைவு கூருவதில் பெருமை அடைகிறேன்.

சாந்தி தயாபரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக