12 மே, 2020

நினைவுகள் ~ இரத்தினம் சிவா

அன்பின் பிங்கலை,

உங்கள் தந்தையின் தமிழ்ப்பணியை மறவாது நினைவு கூர்ந்து தரணியெங்கும் அறிவித்திட எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தந்தை மணம் முடித்து அளவெட்டியில் வாழ்ந்த காலம் எனது  இளமைக்காலம். ஒரு சில தருணங்களே அவரைக் காணவும் அவருடன் கதைக்கவும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அச்சில தருணங்களின் போதும் அவரின் அன்பான அணுகு முறையும் என்றும் புன்னகை பூத்தவாறு கதைப்பதும் இன்றும் என் நெஞ்சில் நிலைத்துள்ளது.
புலம்பெயர் தமிழ்ச்சிறுவர்களுக்கு தமிழ் அறிவை புகட்ட  எண்ணம் கொண்டு “சிறுவர் அமுதம்” என்ற கிண்ணத்தில் தமிழ் அமுதம் நிரப்பி வழங்கி வந்த வேளையில் திடீரென அவர் இவ்வுலகை விட்டு நீங்கியது அவரைத் தெரிந்த அவருடன் பழகிய அனைவர்க்கும் ஏன் தமிழுலகிற்குமே பேரிழப்பாய் அமைந்தது.

இரத்தினம் சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக