10.05.2020 அன்று
70 வயது அகவையே தொடும் எனது அன்புக்குரிய மாமாவின்
நினைவுகளை சுமந்து கொண்டு, அவர் எம்முடன் வாழ்ந்த
காலங்களில் எனது சிறு வயதில்
அவரைப்பற்றி எனது மனதில் பதிந்த
சில மறக்க முடியாத விடயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்து
கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனது
பெயர் சிவராசா ஸ்ரீசங்கர். எனக்கு இந்த பெயரை சூட்டியது
கூட எனது மாமாதான் என்பதை
நான் வளர்ந்த பின் அறிந்து கொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் நான் நான்காவது பிள்ளை.
சிறு வயதில் நான் மிகவும் மெல்லிய
தோற்றத்தில் இருந்தேன். இதனால்
எனக்கு எப்போதும் நோய்கள் அதிகமாக ஏற்படுவது உண்டு. இதனால் எனது மாமா என்
மீது மிகவும் கூடிய அக்கறை எடுத்துக் கொள்வர்.
சிறுவர் அமுதம் 14.01.1990 தைப்பொங்கல் அன்று எனது தந்தை சின்னத்தம்பி இராஜேஸ்வரனால் (சின்ன இராஜேஸ்வரன், Sinna Rajeswaran) புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடப் பட்ட மாதாந்த சஞ்சிகை ஆகும். எனது தந்தை 19.04.1994 அன்று வாகன விபத்தில் இறந்து விட எனது அன்னை புனிதமலர் இராஜேஸ்வரன் இதனை மேலும் ஐந்து வருடங்களுக்கு நடத்தினார். இந்த வலைப்பக்கம் மூலமாக இச்சஞ்சிகைகளை நாங்கள் ஒன்லைனில் வெளியிடுகிறோம்.
8 மே, 2020
நினைவுகள் ~ மருமகன் சங்கர்
மாமா அவரது திருமணத்திற்கு முன் எங்களுடனேயே வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் எல்லாம் எனது சகோதர சகோதரிகள் அனைவரும் எனது மாமாவால் கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ படுவார்கள். ஆனால் நான் என்ன தவறுகள் செய்தாலும் கூட மாமா என்னை எதுவும் கேட்கவே மாட்டார். அவ்வளவுக்கு என் மேல் அளவு கடந்த பாசத்தை காட்டி என்னை வளர்த்தார். அவர் கொழும்பில் வேலை செய்த காலத்தில் விடுமுறை காலங்களில் வீட்டுக்கு திரும்பி வரும்போது கொண்டு வரும் அனைத்து விளையாட்டு பொருட்களையும் எனக்கே கொடுத்து விடுவார். நான் இப்போதும் எனது மாமாவை நினைக்கும் போது எனது நினைவில் வருவது அவர் எங்களுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி தருவது மட்டும் இன்றி அவற்றையெல்லாம் வைத்து எங்களுடன் சேர்ந்து அவரும் விளையாடுவதேயாகும். இவ்வாறு அவர் எனது சிறுவயதில் என்னுடன் சேர்ந்து விளையாடிய நினைவுகள்தான் இன்றும் எனது மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கின்றன. இவ்வாறான பழக்கத்தை நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. என்னிடமும் அது இல்லை. எப்போதும் பெரியவர்கள் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் போது பிள்ளைகளுக்கு அவர்கள் மீது அன்பும், மரியாதையும் தானாகவே வளர்ந்து விடுகின்றது.
இவ்வாறே எனது மாமாவும் எனது சிறுவயதிலேயே என் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். நான் அவரை எனது 9-வது வயதில் தான் கடைசியாக பார்த்தேன். அவர் வெளி நாடு சென்ற பின் அங்கிருந்தும் அவர் எனக்கு படிப்பு சம்மந்தமான பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் என்று எல்லாம் வாங்கி அடிக்கடி கடிதம் எழுதி சுகம் விசாரித்துக் கொள்வார். எப்போதும் நன்றாக படிக்க வேண்டும் என்பதை அறிவுறித்திக் கொண்டு இருந்தார். ஆனால் நான் அதை கடைசி வரைக்கும் செய்யவில்லை.
இன்று எனது மாமா உயிருடன் எங்களுடன் இல்லாத போதும் எனக்கு சிறு வயதில் அவர் மீது ஏற்பட்ட ஒரு தனித்துவமான அன்பு எனது வாழ்வின் கடைசி காலம் வரை அவரது நினைவுகளை சுமந்து செல்லும் என்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சில சமயத்தில் எனக்கு மரண பயம் ஏற்படும் போது நான் நினைத்து கொள்வதுண்டு இறந்த பின் எனது மாமாவை நான் சந்திப்பேன் என்று.
நன்றி
சிவராசா ஸ்ரீசங்கர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக