21 மே, 2020

நினைவுகள் ~ கலைவாணி ஏகாணந்தராஜா


ஆண்டுகள் 25 கடந்தாலும் எம் மனங்களை விட்டகலாத மா மனிதர் சின்ன ராஜேஸ்வரன். எங்கள் குழந்தைகளின் அமுதம் மாமா. 1990ம் ஆண்டு. அப்போது நான் Köln என்ற இடத்தில் சங்கீத வகுப்பு நடாத்திக்கொண்டிருந்தேன். அப்போது மலையாள சமூகத்தினர் மட்டுமே
என்னிடம் கற்றுவந்தனர். ஒரு நாள் 6 அல்லது 7 வயது பெண் குழந்தையுடன்
ராஜேஸ்வரன் அவர்கள் வகுப்புக்கு சமூகமளித்திருந்தார். அந்த சிறுமி மிக சரளமாக தமிழ் பேசுவதையும் பாடல்களை மிக விரைவாக பாடம்செய்து பாடுவதையும் கண்டு பிரமித்தேன்.

20 மே, 2020

நினைவுகள் ~ சாந்தி தயாபரன்

என் அன்பான ராசமாமா எம்மை விட்டுப் பிரிந்தாலும் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.  என் 11 வயதிலிருந்து நான் அவர்களுடன் வாழும் வாய்ப்பு கிடைத்தது.  என்னைப் பிறர் போற்றுமளவிற்கு மிகவும் நன்றாக படிக்க வைத்தார்.  பின் நாட்டு நிலைமை காரணமாக ஐரோப்பாவிற்கு புலம் பெயர் வேண்டிய சூழ்நிலையில் என்னையும் தன்னுடன் அழைத்து வந்தார்.   அங்கே எனக்கு திருமணம் பேசி அவரே முன்னின்று செய்து வைத்தார். 

18 மே, 2020

நினைவுகள் ~ கௌரியன் சிவானந்தராஜா


எங்களை எல்லாம் தாலாட்டி சீராட்டிய அன்பானவர். புலத்தில் வளரும் இளையோர் நாம் கற்பதற்கு சிறுவர் அமுதம் சஞ்சிகையை படைத்த பாசமான எங்கள் மாமா இன்று எங்களுடன் இல்லை என்பது மிகவும் கவலை.ஆனால் அவர் என்றும் எம்முள் வாழ்கிறார்.



நினைவுகள் ~ சிவானந்தராஜா & ரஞ்சிதாதேவி


எம்மை விட்டுப் பிரிந்து  இறையடி சேர்ந்த திரு இராஜேஸ்வரன் அண்ணாவுடன் குடும்பம் சகிதமாக பழகிய நினைவுகள் பசுமையானவை.மிகுந்த அறிவாற்றல் நிரம்பப் பெற்றவர். இரங்கிய மனமும் எல்லோருக்கும் உதவி  செய்யும் மனப்பான்மையும்  உடையவர். தாய்மொழிப் பற்று, மொழி அறிவு நிரம்பிய இவர் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் மக்களிற்கு அகதி அந்தஸ்து கோரும் பல வழிமுறைகளைக் காட்டி செயல்படுத்தி எம்மைப் போல் பலருக்கும் உதவி புரிந்த மகத்தான ஓர் உறவு.

நினைவுகள் ~ சந்திரமலர் மகேந்திரன்

எனது கணவரின் மைத்துனரான திரு.இராஜேஸ்வரன் அவர்கள், எமது திருமணத்தின் பின் எனது சகோதரராக அறிமுகமானார். அறிமுகமான போது அவர் தோற்றத்தில் சிறிது கடுமையானவர் போற்தோற்றமளித்தாலும், பழகுவதற்கும், பிறருக்கு உதவிகள் செய்வதிலும் விரும்பத்தக்க ஒருவராக இருந்தார்.அவர் கடைசிவரை எம்குடும்பத்தோடு நல்லுறவோடு பழகி, கணவருக்கு நல்ல நண்பராகவும், நம்பிள்ளைகளிற்கு நல்லதொரு மாமாவாகவும் இருந்து வந்தார்.

குறிப்பாக ஏனையவர்கள் கூறியது போல் 1990 களில் நாம் பிள்ளைகளோடு இங்கு வாழ்ந்த காலத்தில் கணணி , இணையம், கைத்தொலைபேசி, போன்ற தொழில்நுட்பவசதிகளும், வானொலி ,தமிழ்த்தொலைக்காட்சி போன்ற தமிழ் ஊடகங்களும் இல்லாத காலம்.

நினைவுகள் ~ "மண்" சிவராசா

“சிறுவர் அமுதம்” சஞ்சிகை ஆசிரியர் சின்ன இராஜேஸ்வரன்  
      மறைந்து 25 வருடங்கள் ஓடிவிட்டாலும்….

"கடல்" ராஜன், சின்ன இராஜேஸ்வரனுடன், "மண்" சிவராசா
இலங்கைத் தமிழர்கள் தாயகத்தில் ஏற்பட்ட இனப்போராட்டங்களால் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டமை உலக வரலாறாகும். அந்த வகையில்தான் அமரர் சின்ன இராஜேஸ்வரனும் நானும் 1983ம் ஆண்டில் யேர்மனிக்கு வந்து சேர்ந்தோம்.

அவர் ஒரு நகரிலும் நான் ஒரு நகரிலும் வாழ்ந்துகொண்டிருந்தோம். யேர்மனியில் தமிழர்களின் குடியேற்றப்பரம்பல் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது.

16 மே, 2020

நினைவுகள் ~ குலேந்திரன்

சின்னத்தான்...

எத்தனை இரவுகளில்
தூக்கம் கலைத்தவன் நீ
நடுநிசிகளில் கனாக்கண்டு
நீ இன்னும் உயிருடன் என்று
விழிகசிய விழித்தவன் நான்
சின்னத்தான் என்ற உறவு மரித்து
நண்பர்களாய் உலாவந்த நாட்களும் உண்டு
இது ஒன்றும் கவிக்காக தொகுக்கப்பட்டதல்ல
நிஜம்...
நிஜத்தின் வெளிப்பாடு...
நீ காலம் முந்தி சென்று விட்டாய்?
இதுதான் மற்றைய நிஜம்...
அன்புடன் பிங்கலையின் குஞ்சுமாமா  

 

15 மே, 2020

நினைவுகள் ~ இக.கிருஷ்ணமூர்த்தி

வணக்கம் நண்பர்களே!
 
திரு சின்ன இராசேஸ்வரன் அவர்களை நான் நன்கு அறிவேன் அவர் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுக்கமாக இருந்தார்.சிறுவரமுதம் வெளியிடுவது மட்டுமல்லாது, கடல் ராஜனுடன் இனைந்தும் பல பதிவுகளை செய்திருந்தார். பட்டிமன்றம் பேசுவதில் அதிக அர்வம் உள்ள அவரை  விபத்து என விரைவாக காலன் கவர்ந்து கொண்டார். அவருக்கு எனது அஞ்சலிகள்.

12 மே, 2020

நினைவுகள் ~ இரத்தினம் சிவா

அன்பின் பிங்கலை,

உங்கள் தந்தையின் தமிழ்ப்பணியை மறவாது நினைவு கூர்ந்து தரணியெங்கும் அறிவித்திட எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தந்தை மணம் முடித்து அளவெட்டியில் வாழ்ந்த காலம் எனது  இளமைக்காலம். ஒரு சில தருணங்களே அவரைக் காணவும் அவருடன் கதைக்கவும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அச்சில தருணங்களின் போதும் அவரின் அன்பான அணுகு முறையும் என்றும் புன்னகை பூத்தவாறு கதைப்பதும் இன்றும் என் நெஞ்சில் நிலைத்துள்ளது.

11 மே, 2020

நினைவுகள் ~ மருமகள் சரளா


எனது ஆசை மாமாவின் 70 ஆவது பிறந்த நாளுக்கு அவரின் நினைவுகளுடன், அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் நினைவுகள் எங்கள் மனதில் வண்ணங்களாய் இருக்கின்றன

அதில் சில ,

என் மனதுக்குள் உங்களைப்பற்றி நினைக்கும் பாேதெல்லாம் என் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் அவையெல்லாம் நீங்கள் எங்களுக்கு காட்டிய அன்பின் நன்றிகள் , நீங்கள் எங்களுக்கு மாமா மட்டும் இல்லை நல்ல தந்தையாகவும் நல்தாெரு ஆசானகவும் , மற்றும் நிழல் தரும் மரம் பாேன்று இருந்தீர்கள்.

8 மே, 2020

நினைவுகள் ~ பிங்கலை செந்திலன் * மகள் *


நான், சிறுவர் அமுதம் ஆசிரியர்களான புனிதமலர், இராஜேஸ்வரன் தம்பதிகளின் ஒரே மகள் ஆவேன். இலங்கையில் பிறந்த நான், 1986 ஜேர்மனி நாட்டுக்கு வந்தேன். ஜேர்மன் பள்ளியில் சேர்ந்து நான் ஜேர்மன் கற்றுக் கொள்ளும் முன்பே எனது அன்னையும் தந்தையும் எனக்கு வீட்டில் தமிழ் ஆர்வத்தை வளர்த்தார்கள்.  எனது அன்னை பல பல கதைகள் சொல்லி எனக்கு தமிழில் ஆர்வம் ஏற்ற, எனது தந்தை அறிவியல், துணுக்குகள், கவிதை, கட்டுரை மூலமாக எனது ஆர்வத்தை வளர்த்தார். தமிழைப் பள்ளிப் புத்தகங்களாலோ இல்லை திருக்குறள், ஆத்திசூடி போன்ற பழமையான, பழைய நூல்களாலோ திணிக்காமல், எனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை நன்று அறிந்து எனக்குத் தெரியாமலே தமிழை என்னிடம் ஊற்றினார்கள்.

நினைவுகள் ~ மருமகன் சங்கர்



10.05.2020 அன்று 70 வயது அகவையே தொடும் எனது அன்புக்குரிய மாமாவின் நினைவுகளை சுமந்து கொண்டு, அவர் எம்முடன் வாழ்ந்த காலங்களில் எனது சிறு வயதில் அவரைப்பற்றி எனது மனதில் பதிந்த சில மறக்க முடியாத விடயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  எனது பெயர் சிவராசா ஸ்ரீசங்கர். எனக்கு இந்த பெயரை சூட்டியது கூட எனது மாமாதான் என்பதை நான் வளர்ந்த பின் அறிந்து கொண்டேன். எங்கள் குடும்பத்தில் நான் நான்காவது பிள்ளை. சிறு வயதில் நான் மிகவும் மெல்லிய தோற்றத்தில் இருந்தேன். இதனால் எனக்கு எப்போதும் நோய்கள் அதிகமாக ஏற்படுவது உண்டு. இதனால் எனது மாமா என் மீது மிகவும் கூடிய அக்கறை எடுத்துக் கொள்வர்.

1 மே, 2020

நினைவுகள் ~ புனிதமலர் இராஜேஸ்வரன்

1980 களில் ஐரோப்பிய​ நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் அன்று அந்தந்த நாட்டு மொழியை மட்டும் படிக்கும் சூழ்நிலையாக இருந்தது.  தமிழை பெற்றோர் பேச்சு மூலமாகவும், திரைப் படங்கள் மூலமாகவும் மட்டும் அறிந்து கொண்டனர்.  இது புலம் பெயர் தமிழர்கள் பலருக்கு வருத்தத்தை தந்தது. சிறுவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், தன்னம்பிக்கையாலும் சின்னத்தம்பி இராஜேஸ்வரன் என்ற தனி ஒருவரால் சிறுவர் அமுதம் என்ற சிறுவர் சஞ்சிகை ஆரம்பிக்கப் பட்டது. மாதமொரு சஞ்சிகையாக சிறுவர் அமுதம் வெளிவந்தது. தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள் கொண்ட கையெழுத்துப் பிரதியாக 14.01.1990 தைப்பொங்கல் அன்று முதல் சஞ்சிகை வெளி வந்தது.

நினைவுகள் ~ பிரபா பரணீதரன்

இன்று                                                   அன்று: சிறுவர் விழாவில் பாரதியாக


"சிறுவர் அமுதம்" ஆசிரியர் மறைந்த திரு ராஜேஸ்வரன் மாமா அவர்களின் 70 ஆவது பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய  சில ஞாபகங்களை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

இலங்கையை விட்டு 80 களில் ஜெர்மனிக்கு வந்த என்னைப்போன்றோருக்கு எமது மொழி, கலை, கலாச்சாரத்தை கற்பதற்கு எமது பெற்றோரின் ஊக்கத்தோடு, ஜெர்மனியில் வெளிவந்த சஞ்சிகைகளும் மிகவும் உதவியாக இருந்தன. அதில் குறிப்பாக "சிறுவர் அமுதம்" சஞ்சிகை எனக்கு தமிழ்மொழியின் மேல் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்து என்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தது.