சிறுவர் அமுதம் 14.01.1990 தைப்பொங்கல் அன்று எனது தந்தை சின்னத்தம்பி இராஜேஸ்வரனால் (சின்ன இராஜேஸ்வரன், Sinna Rajeswaran) புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடப் பட்ட மாதாந்த சஞ்சிகை ஆகும். எனது தந்தை 19.04.1994 அன்று வாகன விபத்தில் இறந்து விட எனது அன்னை புனிதமலர் இராஜேஸ்வரன் இதனை மேலும் ஐந்து வருடங்களுக்கு நடத்தினார். இந்த வலைப்பக்கம் மூலமாக இச்சஞ்சிகைகளை நாங்கள் ஒன்லைனில் வெளியிடுகிறோம்.
28 ஜூன், 2020
நினைவுகள் ~ பொன் .புத்திசிகாமணி
5 ஜூன், 2020
நினைவுகள் ~ ஜெயா குடும்பம்
உன்னத உயிர் அன்று உறைந்ததுவே
உறுதியின் உறைவிடம் தகர்ந்ததுவே
நான்கு வருடங்கள் நட்போடு நீர் இருந்தீர்
நான் வளரப் பலவழியில் நீர் உழைத்தீர்
கவிஞனாக எனை அன்று களத்தில் நீர் இறக்கிவிட்டீர்
கண்மூடித்தூங்கும் நேரம் காலனுடன் சென்றுவிட்டீர்
மகளை ஓர் கண்ணாக கரம்பற்றி வளர்த்து வந்தீர்
மனையாளை மறுகண்ணாய் மனதினிலே ஏற்றுவந்தீர்
மறைந்தது மாதங்களல்ல கரைந்தது கால் நூற்றாண்டு
மறக்குமா எம்மனது மலர்ந்த உம் முகம் அதனை
மக்கள் மனையாளுடன் மனதுருகிப் பிரார்த்திக்கும்
21 மே, 2020
நினைவுகள் ~ கலைவாணி ஏகாணந்தராஜா
என்னிடம் கற்றுவந்தனர். ஒரு நாள் 6 அல்லது 7 வயது பெண் குழந்தையுடன்
ராஜேஸ்வரன் அவர்கள் வகுப்புக்கு சமூகமளித்திருந்தார். அந்த சிறுமி மிக சரளமாக தமிழ் பேசுவதையும் பாடல்களை மிக விரைவாக பாடம்செய்து பாடுவதையும் கண்டு பிரமித்தேன்.
20 மே, 2020
நினைவுகள் ~ சாந்தி தயாபரன்
18 மே, 2020
நினைவுகள் ~ கௌரியன் சிவானந்தராஜா
நினைவுகள் ~ சிவானந்தராஜா & ரஞ்சிதாதேவி
நினைவுகள் ~ சந்திரமலர் மகேந்திரன்
நினைவுகள் ~ "மண்" சிவராசா
"கடல்" ராஜன், சின்ன இராஜேஸ்வரனுடன், "மண்" சிவராசா |
16 மே, 2020
நினைவுகள் ~ குலேந்திரன்
எத்தனை இரவுகளில்
தூக்கம் கலைத்தவன் நீ
நடுநிசிகளில் கனாக்கண்டு
நீ இன்னும் உயிருடன் என்று
விழிகசிய விழித்தவன் நான்
சின்னத்தான் என்ற உறவு மரித்து
நண்பர்களாய் உலாவந்த நாட்களும் உண்டு
இது ஒன்றும் கவிக்காக தொகுக்கப்பட்டதல்ல
நிஜம்...
நிஜத்தின் வெளிப்பாடு...
நீ காலம் முந்தி சென்று விட்டாய்?
இதுதான் மற்றைய நிஜம்...
அன்புடன் பிங்கலையின் குஞ்சுமாமா
15 மே, 2020
நினைவுகள் ~ இக.கிருஷ்ணமூர்த்தி
12 மே, 2020
நினைவுகள் ~ இரத்தினம் சிவா
11 மே, 2020
நினைவுகள் ~ மருமகள் சரளா
10 மே, 2020
8 மே, 2020
நினைவுகள் ~ பிங்கலை செந்திலன் * மகள் *
நினைவுகள் ~ மருமகன் சங்கர்
10.05.2020 அன்று
70 வயது அகவையே தொடும் எனது அன்புக்குரிய மாமாவின்
நினைவுகளை சுமந்து கொண்டு, அவர் எம்முடன் வாழ்ந்த
காலங்களில் எனது சிறு வயதில்
அவரைப்பற்றி எனது மனதில் பதிந்த
சில மறக்க முடியாத விடயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்து
கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனது
பெயர் சிவராசா ஸ்ரீசங்கர். எனக்கு இந்த பெயரை சூட்டியது
கூட எனது மாமாதான் என்பதை
நான் வளர்ந்த பின் அறிந்து கொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் நான் நான்காவது பிள்ளை.
சிறு வயதில் நான் மிகவும் மெல்லிய
தோற்றத்தில் இருந்தேன். இதனால்
எனக்கு எப்போதும் நோய்கள் அதிகமாக ஏற்படுவது உண்டு. இதனால் எனது மாமா என்
மீது மிகவும் கூடிய அக்கறை எடுத்துக் கொள்வர்.
1 மே, 2020
நினைவுகள் ~ புனிதமலர் இராஜேஸ்வரன்
1980 களில் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் அன்று அந்தந்த நாட்டு மொழியை மட்டும் படிக்கும் சூழ்நிலையாக இருந்தது. தமிழை பெற்றோர் பேச்சு மூலமாகவும், திரைப் படங்கள் மூலமாகவும் மட்டும் அறிந்து கொண்டனர். இது புலம் பெயர் தமிழர்கள் பலருக்கு வருத்தத்தை தந்தது. சிறுவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், தன்னம்பிக்கையாலும் சின்னத்தம்பி இராஜேஸ்வரன் என்ற தனி ஒருவரால் சிறுவர் அமுதம் என்ற சிறுவர் சஞ்சிகை ஆரம்பிக்கப் பட்டது. மாதமொரு சஞ்சிகையாக சிறுவர் அமுதம் வெளிவந்தது. தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள் கொண்ட கையெழுத்துப் பிரதியாக 14.01.1990 தைப்பொங்கல் அன்று முதல் சஞ்சிகை வெளி வந்தது.
நினைவுகள் ~ பிரபா பரணீதரன்
இன்று அன்று: சிறுவர் விழாவில் பாரதியாக |
"சிறுவர் அமுதம்" ஆசிரியர் மறைந்த திரு ராஜேஸ்வரன் மாமா அவர்களின் 70 ஆவது பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய சில ஞாபகங்களை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
இலங்கையை விட்டு 80 களில் ஜெர்மனிக்கு வந்த என்னைப்போன்றோருக்கு எமது மொழி, கலை, கலாச்சாரத்தை கற்பதற்கு எமது பெற்றோரின் ஊக்கத்தோடு, ஜெர்மனியில் வெளிவந்த சஞ்சிகைகளும் மிகவும் உதவியாக இருந்தன. அதில் குறிப்பாக "சிறுவர் அமுதம்" சஞ்சிகை எனக்கு தமிழ்மொழியின் மேல் இருந்த ஆர்வத்தை ஊக்குவித்து என்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்குவகித்தது.