எனது கணவரின் மைத்துனரான திரு.இராஜேஸ்வரன் அவர்கள், எமது திருமணத்தின் பின் எனது சகோதரராக அறிமுகமானார். அறிமுகமான போது அவர் தோற்றத்தில் சிறிது கடுமையானவர் போற்தோற்றமளித்தாலும், பழகுவதற்கும், பிறருக்கு உதவிகள் செய்வதிலும் விரும்பத்தக்க ஒருவராக இருந்தார்.அவர் கடைசிவரை எம்குடும்பத்தோடு நல்லுறவோடு பழகி, கணவருக்கு நல்ல நண்பராகவும், நம்பிள்ளைகளிற்கு நல்லதொரு மாமாவாகவும் இருந்து வந்தார்.
குறிப்பாக ஏனையவர்கள் கூறியது போல் 1990 களில் நாம் பிள்ளைகளோடு இங்கு வாழ்ந்த காலத்தில் கணணி , இணையம், கைத்தொலைபேசி, போன்ற தொழில்நுட்பவசதிகளும், வானொலி ,தமிழ்த்தொலைக்காட்சி போன்ற தமிழ் ஊடகங்களும் இல்லாத காலம்.